
மதுரை மாவட்டம், சொரிக்காம்பட்டியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கிடா வெட்டு சம்பந்தி அசைவ திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கரும்பாறை முத்தையா கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் புதன்கிழமை பைபாஸ் அறுவைச் சிகிச்சை?
நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 100- க்கும் மேற்பட்ட கிடாக்களைக் கொண்டும், கோழிகளைக் கொண்டும் 2,500 கிலோ அரிசி மூலம் தயார் செய்யப்பட்ட அசைவ கறி விருந்தில் கோயில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 10,000- க்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர். கோயிலுக்கு அருகே உள்ள மிகப்பெரிய மைதானத்தில் ஆண் பக்தர்கள் அனைவரும் அமர வைக்கப்பட்டு, கறி விருந்து நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுப் பாட்டில்களை உடைத்து பெண்கள் நூதன போராட்டம்!
இந்த கறி விருந்தில் பெண்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்பதால், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். எனினும், கோயிலில் நடைபெறும் வழிபாடுகளில் பெண்களுக்கு அனுமதி உள்ளது. கறி விருந்து காரணமாக, அந்த கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது.