

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் புதன்கிழமை பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுப் பாட்டில்களை உடைத்து பெண்கள் நூதன போராட்டம்!
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுத்தப்பட்டதாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதற்கிடையே, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், முதலில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் காவேரி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
வழக்குத் தொடர்பாக செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை அமர்வு நீதிமன்றம். உத்தரவிட்டது. மேலும், அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
எட்டு நாள் காவல் முடிந்து வரும் ஜூன் 23- ஆம் தேதி அன்று மாலை 03.00 மணிக்கு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.பி. நவாஸ் கனிக்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் இடையே கடும் வாக்குவாதம்!
இந்த நிலையில், இதய வலியால் சிகிச்சைப் பெற்று வரும் இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் ஜூன் 21- ஆம் தேதி புதன்கிழமை அன்று பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


