spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"கோட் சூட் அணிந்து ஏன்?"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

“கோட் சூட் அணிந்து ஏன்?”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

-

- Advertisement -

 

"கோட் சூட் அணிந்து ஏன்?"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

we-r-hiring

‘தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024’ சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று (ஜன.07) காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மூத்த இயக்குனருடன் புதிய படத்தில் இணையும் மோகன்லால்!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழ்நாடு அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தங்கம் தென்னரசு மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பொருளாதார வளர்ச்சியில் அதி விரைவு பாதையில் தமிழ்நாடு பயணித்து வருகிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் பொருளாதார வளர்ச்சி மேலும் உயரும் என நம்புகிறேன். வெளிநாடு சென்றால் கோட் சூட் அணிவது வழக்கம்; வெளிநாடுகளில் இருந்து தொழிலதிபர்கள் வந்துள்ளதால் தற்போது கோட் சூட் அணிந்துள்ளேன்.

குடும்பங்கள் ரசிக்கும் வெப் சீரிஸ்….. சேரனின் ‘ஜர்னி’ அப்டேட்!

மாநிலத்தின் முதலீடு ஈர்ப்புத் திறனை உலகுக்கு வெளிப்படுத்த முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரையும் வரவேற்கிறேன். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, தலைமைத்துவம், நீடித்த வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து மாநாடு நடக்கிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் உள்ளது.

தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயர் கிடைக்க வேண்டும்… இளம் நாயகி பவ்யா ஆசை…

திருவள்ளுவர், கனியன் பூங்குன்றனார் பிறந்த மண்ணிற்கு முதலீட்டாளர்கள் வந்துள்ளனர். ஆட்சி மீது நல்லெண்ணம், சட்டம்- ஒழுங்கு சீராக இருப்பதால் மட்டுமே முதலீடு குவிகிறது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

MUST READ