சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாயும், கிராமுக்கு 20 ரூபாயும் குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏறி, இறங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த புதன் கிழமை சென்னையில் ஒரு சவரன் தங்கம் 40 ரூபாய் குறைந்து 47,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதேபோல் வியாழக்கிழமை சவரனுக்கு அதிரடியா 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46,960 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளிக்கிழமை ஒரு சவரன் தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 46,880 ரூபாய்க்கு விற்பப்பட்டது. இதேபோல் கடந்த சனிக்கிழமை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாயும், கிராமுக்கு 20 ரூபாயும் குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 830 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.80 காசுகளும், கிலோவுக்கு ஆயிரத்து 800 ரூபாயும் குறைந்துள்ளது..