spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு

-

- Advertisement -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி அன்று அரசு விடுமுறை அளித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் வரும் 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்கும்,
tamilnadu assembly
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- இவ்வாண்டு தமிழ்நாட்டில் 14.01.2025 செவ்வாய்கிழமை அன்று தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும், 15.01.2025, 16.01.2025, 18.01.2025 மற்றும் 19.01.2025  ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளான 17.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.
கொழுக்கட்டை சூறையிடும் வினோத திருவிழா 
அக்கோரிக்கைகளை ஏற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை  கொண்டாடும் வகையில், 17.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் 25.01.2025 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார்.

MUST READ