

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காவல்துறையினர் தடுப்புகளை அமைத்த நிலையில், வரிசையில் நின்றபடி விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் அஞ்சலி!
அதேபோல், திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, விஜயகாந்த் உடலுக்கு மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். அத்துடன், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆளுநர் ஆறுதல் கூறினார்.
இன்னும் சற்று நேரத்தில் விஜயகாந்த் உடல், மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள வாகனத்தில் வைத்து தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் இன்று (டிச.29) மாலை 04.45 மணிக்கு விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி!
இறுதி ஊர்வலத்தில் முக்கிய பிரமுகர்கள், விஜயகாந்த் குடும்பத்தினர் என 200 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும், ஈவெரா சாலை வழியாக இறுதி ஊர்வலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


