

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப்.12) தொடங்கிய நிலையில், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் புறக்கணித்திருந்தார். இதற்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டணத்தைப் பதிவுச் செய்திருந்தனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (பிப்.12) நடந்த நிகழ்வுகள் என்ன? என்பது குறித்து ஆளுநர் மாளிகையின் மக்கள் தொடர்புத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த பிப்ரவரி 09- ஆம் தேதி பெறப்பட்ட அரசின் உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்தன. உரை தொடக்கம், முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என கடந்த காலங்களில் கடிதம் எழுதப்பட்டது.
ஆளுநரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது – அன்புமணி ராமதாஸ்
ஆளுநரின் ஆலோசனைகளைப் புறக்கணிக்க வேண்டுமென அரசு தீர்மானித்துள்ளது. தவறான அறிக்கை, அப்பட்டமான அரசியல் கருத்துகளை வெளியிடுவதாக ஆளுநர் உரை இருக்கக் கூடாது. ஆளுநரின் உரையானது அரசாங்கத்தின் சாதனைகள், கொள்கைகள், திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும். உண்மைக்கு புறம்பான தகவல்கள் இடம் பெற்றிருந்ததால் உரையை வாசிக்கவில்லை. சபாநாயகருக்கான கண்ணியத்தை அப்பாவு குறைத்துவிட்டார்” என்று ஆளுநர் மாளிகை தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.


