Homeசெய்திகள்தமிழ்நாடுடெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

-

- Advertisement -

 

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!
Photo: Governor RN Ravi

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நான்கு நாள் பயணமாக இன்று (ஜூன் 23) டெல்லி செல்கிறார்.

we-r-hiring

பாட்னாவில் குவிந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜூன் 23) காலை 10.00 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களையும் ஆளுநர் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு வரும் ஜூன் 27- ஆம் தேதி அன்று சென்னை திரும்புவார் எனக் கூறப்படுகிறது.

“பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் தீவிர முயற்சி”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தமிழக அரசுடன் கருத்து வேறுபாடு நிலவும் சூழலில் ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியல் சூழல் குறித்தும், அமித்ஷாவிடம் ஆளுநர் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ