
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு கூடுதல் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்தாண்டு பொறியியல் பயில 18,610 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சலுகைகள் அளித்துள்ளதால் பொறியியல் பயில்வதற்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டிலும் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டிலும் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளது.

ஆளுநர் பேசும் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது- செல்லூர் ராஜூ
பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரவும் மாணவர்களிடையே ஆர்வம் அதிகமாக உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகே பொறியியல் கலந்தாய்வை நடத்தவுள்ளோம். பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என ஆளுநர் நினைக்கிறார். எப்போது வேண்டுமானாலும் பட்டமளிப்பு விழாவை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது. பட்டப்படிப்பு படித்துத் தேர்ச்சிப் பெற்ற ஒன்பது லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் உள்ளனர்.
“தலைநிமிர்ந்துக் கம்பீரமாக நிற்கிறது தமிழகம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. மற்ற 12 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. பட்டமளிப்பு விழா குறித்து தமிழக அரசிடம் ஆளுநர் கேட்பது கூட இல்லை. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநருக்கு கோரிக்கை விடுக்கிறேன்”. இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


