மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகளை மெய்மறக்க வைத்த காத்தாடி பட்டம் பறக்கவிடும் திருவிழா கொண்டாட்டம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
செங்கல்பட்டு அருகே உள்ள மாமல்லபுரத்தில் தொடர்ந்து 2 ஆம் ஆண்டாக பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது.கடந்த 12 ஆம் தேதி தொடங்கிய இவ்விழா நேற்றோடு முடிவுற்றது.
நேற்று சுதந்திரதின விடுமுறை என்பதால் ஒரே நாளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இந்த காத்தாடி திருவிழாவில் கலந்துக் கொண்டுள்ளனர்.
இதற்கு நுழைவுக் கட்டணமாக நேரடியாக ரூ.200-ம்,ஆன்லைன் மூலம் ரூ.150 வசூலிக்கப்பட்டது.ஆன்லைனில் முன்பதிவாக விடுமுறை தினமான நேற்று 4 மணிக்குள் 10,000 டிக்கட்டுகள் விற்றுதீர்ந்துள்ளன.
இங்கு சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.200 வகையான வண்ண வண்ண காத்தாடிகள் பறக்கவிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியடைந்தனர்.நேற்று ஒரே நாளில் மட்டும் 20,000 மக்கள் இந்த வண்ணமையமான காத்தாடியை கண்டு மகிழ்ந்தனர்.பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.