Homeசெய்திகள்தமிழ்நாடுதருமபுரியில் சுட்டெரிக்கும் கோடை வெயில்

தருமபுரியில் சுட்டெரிக்கும் கோடை வெயில்

-

- Advertisement -

தருமபுரியில் சுட்டெரிக்கும் கோடை வெயில்

தருமபுரி மாவட்டம் தொப்பூர் வனப்பகுதியில் வளர்க்கப்படும் 19 ஆயிரம் மரக்கன்றுகளை பாதுகாக்க, டிராக்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றும் பணியினை வனத்துறை மேற்கொண்டுள்ளது.

19,000 மரக்கன்றுகளை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை

தருமபுரி வனச்சரக எல்லைக்குட்பட்ட தொப்பூர் காப்புக்காட்டில் 38 ஹெக்டர் பரப்பளவு தேர்வு செய்யப்பட்டு கடந்த 2019-20ம் ஆண்டில், 19 ஆயிரம் கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

we-r-hiring
புங்கன், ஆயான், நாவல், இலுப்பை, விலா, வில்வ மரம் வளர்ப்பு

இந்த வனத்தில் புங்கன், வேம்பு, ஆயான், நாவல், இலுப்பை, மலைகள்ளி,விலா, வில்வம், ஜம்பு போன்ற மரங்களும் கொங்கு சந்தனம், வேங்கை போன்ற அரிய வகை மரங்களும் நடவு செய்யப்பட்டுள்ளன. பறவைகள், குரங்கு, மான்கள் போன்ற விலங்குகள் இங்கு அதிகம் காணப்படுகின்றன.

காப்புக்காட்டில் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றும் பணி

இந்நிலையில், கடும் வெயில் பாதிப்பில் இருந்து செடிகளை காக்க, வனப்பணியாளர்கள் 10 பேர், இதர பணியாளர்கள் 30 பேர் என மொத்தம் 40 பேர் தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

MUST READ