
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் வரும் டிசம்பர் 02- ஆம் தேதி நடைபெறவிருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவானது புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணத்தினால் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ப்ரதர் படப்பிடிப்பு தளத்தில் குதூகலம்…. நடிகைகள் உற்சாக நடனம்…
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உலக மாற்றுத்திறனாளிகள் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, டிசம்பர் 02- ஆம் தேதி காலை 10.30 மணியளவில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா மற்றும் விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா / மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற இருந்தது.
மன்சூர் அலிகான் சர்ச்சை விவகாரம்… எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க த்ரிஷாவுக்கு போலீஸ் கடிதம்…
தற்போது, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2 முதல் டிசம்பர் 4- ஆம் தேதி வரை சென்னையில் புயல் / கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, டிசம்பர் 2- ஆம் தேதி முதலமைச்சரின் தலைமையில் நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது. இவ்விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.