- Advertisement -
ஜெயம் ரவி தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். கடைசியாக ஜெயம்ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் இறைவன். ஐ. அகமது இயக்கிய இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாவும் வெற்றி பெறவில்லை. ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது. அதே சமயம் ஜெயம் ரவி தனது 30வது படமான ப்ரதர் எனும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தை சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் எம் ராஜேஷ் இயக்குகிறார்.
இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஜெயம்ரவிக்கு சகோதரியாக பூமிகா சாவ்லா நடிக்கிறார். மேலும் நட்டி நடராஜன், கூல் சுரேஷ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அக்கா, தம்பி உறவை அடிப்படையாக கொண்ட கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
Jayam Ravi’s #Brother Shooting Spot!
Dance : Priyanka Mohan, Bhoomika, Saranya Ponvannan.
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 30, 2023