Homeசெய்திகள்தமிழ்நாடு"ஆதரவற்றோர் இல்லங்களைக் கண்காணிக்க வேண்டும்"- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

“ஆதரவற்றோர் இல்லங்களைக் கண்காணிக்க வேண்டும்”- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

-

 

சிறுவர் இல்லம் மற்றும் ஆதரவற்றோர் இல்லச் செயல்பாடுகளை கண்காணிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியாளர் தூக்கிட்டுத் தற்கொலை!

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் அருகே உள்ள சிறுவர் இல்லத்தில் 38 பேருக்கு முறையான கல்வி வழங்கப்படவில்லை என்றும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர் நியமிக்கப்படவில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (அக்.12) விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “சம்பந்தப்பட்ட சிறுவர் இல்லத்தின் உரிமம் கடந்தாண்டே ரத்துச் செய்யப்பட்டு விட்டது. சிறுவர் இல்லத்தில் இருந்த 38 குழந்தைகளும் மீட்கப்பட்டு சேவாலயா இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்” என்று வாதிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சிறுவர் இல்ல நிர்வாகிக்கு எதிராக வழக்குப் பதியப்பட்டுள்ளது. சிறுவர் இல்ல நிர்வாகிக்கு எதிராக குற்ற வழக்குப்பதிவுச் செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது” என வாதிட்டார்.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 304 உயர்வு!

இதையடுத்து, தமிழகத்தில் செயல்படும் சிறுவர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MUST READ