புதிதாக பிறந்தவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் ஆதார் அடையாள அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஒன்று. ஆதார் அட்டை இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமக்களின் விவரங்களை உள்ளடக்கிய தனித்தனி அடையாள எண் கொண்டவையாகும் ஒரு தனி மனிதனின் அடையாள சான்றாகவும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் 5 முதல் 15 வயது வரையிலான சிறார்கள், ஆதார் கோரி விண்ணப்பித்து பெற முடியும். இதற்காக, அவர்கள் அருகிலுள்ள ஆதார் சேவை மையம் அல்லது இ-சேவை மையத்துக்கு சென்று அங்குள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
அவர்களின் முகவரி சான்றாக பெற்றோர் ஆதார் நகலில் உள்ள முகவரியை அளிக்கலாம். அந்த விண்ணப்பம் பெறப்பட்டதும், சிறார்களின் பயோ மெட்ரிக் எனப்படும் கைவிரல் ரேகை, கருவிழி ரேகை பதியப்படும்.பயோ மெட்ரிக் விவரம் பதியப்பட்டதும், சிறார்களின் புகைப்படம் எடுக்கப்படும். பின்னர் அவர்களின் பெற்றோர் மொபைல் எண் பெறப்பட்டு, அதுவும் பதியப்படும்.
https://www.apcnewstamil.com/news/india/bharti-airtels-another-new-recharge-plan/95240
இதைத் தொடர்ந்து, ஆதாருக்கு விண்ணப்பித்தற்கான ரசீது எதிர்கால பயன்பாட்டுக்காக வழங்கப்படும். அதில் பதிவு செய்த தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதனைக் கொண்டு ஆதார் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.அதன்பின் விண்ணப்பித்த 90 நாள்களில், சிறார்களுக்கு ஆதார் எண் வழங்கப்படும். வீட்டிற்கும் ஆதார் அட்டை தபாலில் அனுப்பி வைக்கப்படும். பிறகு சிறார்கள், 15 வயது பூர்த்தியானதும் ஆதார் சேவை மையம் அல்லது இ-சேவை மையம் சென்று தங்களது பயோ மெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக அதுவரை எத்தகைய புதுப்பிப்பையும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. அதே ஆதாரை பயன்படுத்தலாம்.