அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு கூடுதல் இடம் ஒதுக்கப்படுமா என்ற கேள்விக்கும், டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சிப்பது தொடர்பான கேள்விக்கும் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, ஏற்கனவே கூறிய பதில் தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மழுப்பலான பதிலளித்து புறப்பட்டார்.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கான விருப்ப மனு இன்று முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு இன்று முதல் விருப்ப மனு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்பட உள்ள நிலையில், தமிழக சட்டமன்ற தொகுதிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் , புதுச்சேரிக்கு 5ஆயிரம் ரூபாய், கேரள மாநிலத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு பெற விரும்புவோர், அதற்கான கட்டணத்தை வரையோலையாக செலுத்தி மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்றே தமிழகம் முழுவதும் இருந்து வந்து விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டனர். விருப்ப மனுக்கள் பெற்ற பலர், தங்கள் பெயரிலும், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரிலும் பெற்றது குறிப்பிடத்தக்கது. பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை அதிமுக துணை பொதுச்செயலாளர்கள் KP முனுசாமி, நத்தம் விசுவநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் SP வேலுமணி, அமைப்பு செயலாளர் தங்கமணியிடம் சமர்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருப்ப மனு விநியோகம் நடைபெற்று வருவதாகவும் தொண்டர்களின் எழுச்சி தெரிகிறது. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி வாகை சூடும் என்றும் முன்கூட்டியே வாயினால் என்ன பின் குட்டி வாயினால் என்ன திமுகவை சேர்ந்த ஆளுமைகளுக்கு ஏன் வருத்தம் என்றும் அமைச்சர் ரகுபதி அதிமுகவைப் பற்றி கேள்வி கேட்க அருகதை இல்லை என்று கூறினார். திமுக தலைவர் ஸ்டாலினை வழி நடத்துவது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான் என்றும் அதிமுக புல்லட் ரயில் அதுக்கு இன்ஜின் தேவையில்லை“ என்று கூறினார்.
இன்ஜின் இல்லாத கார் அதிமுக என்ற உதயநிதி விமர்சனத்திற்கு தொடர்பான கேள்விக்கு, டெக்னாலஜி வளர்ந்து கொண்டு இருப்பதாகவும் இது குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு தெரியவில்லை எனவும் சாடினார். வேகமாக சென்று கொண்டிருக்கின்ற அதிமுக இயக்கத்தை அப்டேட் இல்லாத உதயநிதி சொல்வது அவரைக் கேவலப்படுத்திக் கொள்ளக்கூடிய விஷயம் தான்.
பாஜக கூட்டணி சீட்டு விவகாரம் தொடர்பான கேள்விக்கு, “திமுக ஆடி ஆட்டத்திற்கு மூன்று மாதம் கழித்து பதில் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணி மற்றும் தொகுதியை குறித்து கட்சி தான் முடிவு செய்யும் என்றும் நான் எதுவும் செய்ய முடியாது தன் வாழ்நாள் முழுவதும் ராயபுரம் தான் ராயபுரம் தொகுதி மக்களை விட்டு விலக மாட்டேன் என்றும் எப்போதும் ராயபுரத்தில் தான் போட்டியிடுவேன் என திட்டவட்டமாக ஜெயக்குமார் தெரிவித்தார். அதிமுகவின் கொள்கை முடிவை குறித்து நான் பேச முடியாது எனவும் குறிப்பிட்டார்.
இனி, ஆஃபாயில், ஆம்லேட்டை, மறந்துவிட வேண்டியதுதான்! வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட முட்டை விலை!!


