6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுற்றுலாத்துறை இயக்குநராக பொறுப்பு வகித்த, சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்., மனித வள மேம்பாட்டுத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேசிய சுகாதார திட்ட இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலாத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் பொறுப்பு அவருக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத்துறை ஆணையராக பொறுப்பு வகித்த அதுல் ஆனந்த், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளராக சத்யபிரதா சாகு நியமிக்கப்பட்டுள்ளார். சமக்ரா சிக்ஷா திட்ட மாநில திட்ட இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த ஆர்த்தி, துணை முதலமைச்சரின், துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும, தேசிய சுகாதார திட்ட இயக்குநராக அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.