spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

-

- Advertisement -

 

"செந்தில் பாலாஜி துறையில்லா அமைச்சராகத் தொடர்வார்"- தமிழக அரசின் இணையதளத்தில் தகவல் வெளியீடு!
Photo: TN Govt

தமிழகத்தில் புதிதாக 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.

we-r-hiring

மலேசியாவில் நடைபெறும் ‘லியோ’ இசை வெளியீட்டு விழா….. எப்போது?

அதன்படி, தமிழக மாற்றுத்திறனாளி நலத்துறைச் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சிகி தாமஸ் வைத்தியன் நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி குமார் ஜெயந்த் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குநராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைச் சிறப்பு செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கலையரசி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சிறுதொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக விக்ரம் கபூர் ஐ.ஏ.எஸ்., ஊரக வளர்ச்சி மேம்பாட்டு முகமைத் திட்ட அதிகாரியாக மோனிகா ரானா ஐ.ஏ.எஸ்., சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றம் வாரிய செயல் இயக்குநராக சரவணன் ஐ.ஏ.எஸ்., தொழில்துறை ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா பட்நாயக், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக உள்ள கோபாலிடம் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறைக் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரபாஸின் நடிப்பில் உருவாகும் புதிய படம்….. ஜோடியாகும் இரண்டு கதாநாயகிகள்!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைச் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராமன், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா குல்கர்னி, வருவாய் நிர்வாகத்துறைக் கூடுதல் ஆணையராக பிரகாஷ், டி.ஆர்.பி. தலைவராக ஸ்ரீ வெங்கட பிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத் தலைவர் பொறுப்பையும், கூடுதலாக கலையரசி கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ