லண்டனில் இசையமைப்பாளர் இளையராஜா தனது சிம்பொனியை அரங்கேற்ற உள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் தனது சிம்பொனி இசையை இன்று அரங்கேற்ற உள்ளார். இதனையொட்டி இளையராஜாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் சிம்பொனியை அரங்கேற்ற உள்ள இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை என்றும், பாராட்டுகள் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் இன்கிரெடிபிள் இளையராஜா என்றும் தனது வலைதள பதிவில் ஹேஷ்டேக் பதிவிட்டுள்ளார்.