Homeசெய்திகள்தமிழ்நாடு#BREAKING : உருவானது மிக்ஜம் புயல் - வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

#BREAKING : உருவானது மிக்ஜம் புயல் – வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

-

மிக்ஜம் புயல்
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

வங்கக்கடல் பகுதியில் கடந்த நவ. 26ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மெல்ல மெல்ல நகர்ந்து , நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து இன்று காலை புயலாக வலுப்பெற்று சென்னைக்கு 340 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு – தென்கிழக்கில் மையம் கொண்டிருக்கிறது. இந்த வங்கக்கடலில் தற்போது மையம் கொண்டுள்ள இந்த மிக்ஜம் புயல், சென்னையை வேகமாக நெருங்கிக்கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் புதுச்சேரிக்கு 330 கி.மீ கிழக்கு – தென்கிழக்கிலும், நெல்லூருக்கு 470 கி.மீ தென்கிழக்கிலும் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

ஏற்கனவே அறிவித்தபடி இன்று ( நவம்பர் 3ம் தேதி ) உருவாகியுள்ள இந்த மிக்ஜம் புயலானது, நாளை ( நவ.4 தேதி) சென்னைக்கு மிக அருகே வரவுள்ளதுடன், நாளை மறுநாள் (5ம் தேதி) முற்பகலில் ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்க உள்ளது. அத்துடன் நடப்பு ஆண்டில் வங்கக்கடலில் உருவாகும் 4வது புயல் இதுவாகும். மேலும், புயல் நெருங்கும்போது, தரைக்காற்று பலமாக வீசக்கூடும் என்றும் சென்னை மண்டல வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

அந்தவகையில் இன்று (டிச.3) கடலூர், விழுப்புரம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 கி.மீ. முதல் 70 கி. மீ வேகத்தில் வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நாளை விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 கி.மீ. முதல் 80 கி.மீ. வரையிலான வேகத்திலும், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மணிக்கு 50-70 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளது. அத்துடன் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் சுமார் 80 கி.மீ முதல் 100 கி.மீ வரையிலான வேகத்தில் காற்று வீச வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

 

MUST READ