spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉலக அளவில் இந்தியா விண்வெளியில் வியத்தகு சாதனைகளை செய்து வருகிறது - பத்மஸ்ரீ மயிலசாமி அண்ணாதுரை

உலக அளவில் இந்தியா விண்வெளியில் வியத்தகு சாதனைகளை செய்து வருகிறது – பத்மஸ்ரீ மயிலசாமி அண்ணாதுரை

-

- Advertisement -

குறைந்த பொருட்செலவில் அதிக ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பெருமை நமது இந்திய விண்வெளி ஆய்வுத் துறையைச் சாரும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

உலக அளவில் இந்தியா விண்வெளியில் வியத்தகு சாதனைகளை செய்து வருகிறது - பத்மஸ்ரீ மயிலசாமி அண்ணாதுரைதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தூயநெஞ்ச கல்லூரியும் அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் இயங்கி வரும் அண்ணாமலை அறக்கட்டளையும் இணைந்து இன்றைய மாணவர்களும் அறிவியல் சிந்தனையும்  எனும் தலைப்பில்  நிகழ்ச்சி நடைபெற்றது.

we-r-hiring

இந்நிகழ்வில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்  பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தம் ரத்து – கொண்டாடிய கிராம பொதுமக்கள்

அப்போது இன்றைக்கு உலகின் வல்லரசு நாடுகள் என்று பறைசாற்றக்கூடிய நாடுகளுக்கு இணையாக வளர்ந்து வரும் நம் இந்திய நாடு விண்வெளியில் வியத்தகு சாதனைகளைப் படைத்து வருகின்றது. கிராமப்புற அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இன்று அறிவியல் துறையிலும் விண்வெளி ஆய்வுத்துறையிலும் சாதிப்பதற்கான வாய்ப்புகள் கனிந்துள்ளன.

நம்மால் முடியும் என்கிற மன உறுதியோடு மாணவர்கள் நம் இந்திய விண்வெளி வளர்ச்சியில் சாதிப்பதற்கு உங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார் தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறினார் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ