Homeசெய்திகள்தமிழ்நாடுடங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தம் ரத்து - கொண்டாடிய கிராம பொதுமக்கள்

டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தம் ரத்து – கொண்டாடிய கிராம பொதுமக்கள்

-

- Advertisement -

டங்ஸ்டன் கனிம சுரங்க சுரங்க ஒப்பந்தம் ரத்து ஒன்றிய அரசு அறிவிப்பை தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய கிராம பொதுமக்கள்.

டங்ஸ்டன் கனிம சுரங்க சுரங்க ஒப்பந்தம் ரத்து - கொண்டாடிய கிராம பொதுமக்கள்மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி வல்லாளபட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் நிலப்பரப்பில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு 07.11.2024 அன்று வேதாந்தாவின் கிளை நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில் இன்று இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

அரிட்டாபட்டி வல்லாளப்பட்டி நாயக்கர்பட்டி எட்டிமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஐந்தாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு வேதாந்தாவின் கிளை நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில் 09.12.2024 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுரங்க ஒப்பந்தத்திற்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஒன்றிய அரசு அரிட்டாபட்டி உள்ளிட்ட பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் சுமார் 500 ஏக்கர் பரப்பளவை மட்டும் விட்டு விட்டு மற்ற இடங்களில் திட்டம் குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.

டங்ஸ்டன் கனிம சுரங்க சுரங்க ஒப்பந்தம் ரத்து - கொண்டாடிய கிராம பொதுமக்கள்

இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன பகுதி விவசாயிகள் கல்லூரி மாணவர்கள் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து கடந்த பத்தாம் தேதி வல்லாளபட்டி வெள்ளி மலையாண்டி கோவில் போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இத்திட்டம் ரத்து தொடர்பாக ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு வெளியிடுவார்

என தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் நேற்று இப்பகுதியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள்  டெல்லி சென்று  ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்ததை அடுத்து தற்போது இந்த டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த ஒப்பந்த ரத்து அறிவிப்பு என்பது தங்களுடைய போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ள பொதுமக்கள், தனி தீர்மானம் கொண்டு கொண்டு வந்து இந்த திட்டம் தமிழகத்தில் அனுமதிக்கப்படாது என அறிவிப்பு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கிராம பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் 2 சட்ட மசோதாக்கல் நிறைவேற்றம்

MUST READ