spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டு இடைக்கால தடை!

விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டு இடைக்கால தடை!

-

- Advertisement -

முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா மரண வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி சமர்ப்பித்த அறிக்கையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

we-r-hiring

அதில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தன்னை சாட்சியாக விசாரணை ஆணையம் அழைத்துவிட்டு பிறகு என் மீது குற்றச்சாட்டு வைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும், அறிக்கையில் தன் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகளுக்கும், அதனை பயன்படுத்தவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

MUST READ