தமிழகத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடும், அரசு அள்ளிவீசிய முதலீட்டு அறிவிப்புகளும் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே மாறிவருகின்றனவா? அல்லது அண்டை மாநிலங்கள் நம்மை ஓரம் கட்டிக் கொண்டிருக்கின்றனவா? என்ற அனல் பறக்கும் விவாதங்கள் பொருளாதார வட்டாரத்தில் எழுந்துள்ளன.
விளம்பர மோகம்: பல்லாயிரம் கோடி மாயை!பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு
என்ற பிரம்மாண்டப் புள்ளிவிவரங்கள் அள்ளி வீசப்பட்டாலும், களத்தில் அதன் நிஜத் தாக்கம் என்ன என்பது கேள்விகுறியாகவே உள்ளது. பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கோ, திறந்த வெளி விவாதத்துக்கோ இடமளிக்காமல், ரகசியமாகத் திட்டமிடப்படும் இதுபோன்ற மாநாடுகள் வெளிப்படைத்தன்மையைக் கேள்விக்குறியாக்குகின்றன. வெறும் விளம்பர வெளிச்சத்திற்காக நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தையோ அல்லது உண்மையான வேலைவாய்ப்புகளையோ எந்த அளவுக்கு ஈர்க்கப் போகிறது என்ற ஆவேசமான கேள்விகள் தொழில் முனைவோர் மத்தியில் எழுந்துள்ளன.

பின்னடைவைச் சந்திக்கும் தமிழகத் தொழில் துறை
ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் தொழில் தலைநகரமாகத் திகழ்ந்த தமிழ்நாடு, இன்று அண்டை மாநிலங்களின் அதிரடியான உத்திகளுக்கு முன்பு பின்னுக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் முதலீட்டாளர்களைக் கவர போட்டிபோட்டுக் கொண்டு தாராளச் சலுகைகளையும், அதிநவீன உள்கட்டமைப்புகளையும் வழங்கி வருகின்றன. ஆனால், தமிழகத்திலோ சிறு, குறு தொழில்களுக்கான (MSME) முறையான ஆதரவோ, மூலதனக் கடன் வசதிகளோ (Credit access) கிடைக்காமல் தொழில் நிறுவனங்கள் திணறிவருகின்றன.
ஆந்திரா போன்ற மாநிலங்கள் துறைமுகங்களை மையமாகக் கொண்டு புதிய லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விமான நிலையப் பரப்புகளை மிகத் தீவிரமாக அமைத்து வரும் நிலையில், தமிழகத்தின் பல திட்டங்கள் வெறும் காகித அளவிலேயே முடங்கிக் கிடக்கின்றன.
சுற்றுச்சூழல் நெருக்கடியும் கேள்விக்குறியும்
மாநிலத்தில் அறிவிக்கப்படும் பல முதலீடுகள், குறிப்பாகத் தரவு மையங்கள் (Data Centres) போன்ற அதீத நீர்த் தேவையைக் கோரும் திட்டங்கள், ஏற்கனவே கடுமையான நீர் வறட்சியைச் சந்தித்து வரும் தமிழகத்திற்கு எத்தகைய பேரிடரைத் தரும் என்ற எச்சரிக்கை மணிகள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. சுற்றுச்சூழலைப் பற்றியும், உள்ளூர் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பற்றியும் கவலைப்படாமல் அவசரகதியில் செய்யப்படும் இத்தகைய ஒப்பந்தங்கள் மாநிலத்தின் எதிர்காலத்தையே சூறையாடிவிடும் என்ற கடும் கண்டனங்கள் எழுகின்றன.
கட்சி அரசியலின் குறுகிய வட்டத்திற்குள் மாநிலத்தின் பொருளாதார நலன்களை அடகுவைப்பதை விடுத்து, வெளிப்படையான பொருளாதாரக் கொள்கைகளையும், வலுவான திட்டங்களையும் அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல், இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்த தமிழகம், மற்ற மாநிலங்களின் வளர்ச்சி வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பரிதாபமாகத் தோற்றுப்போகும் அபாயம் தவிர்க்க முடியாததாகிவிடும்.
தமிழக அரசியல் களம்: ‘திசை திருப்பும் யுக்தி’ – திமுக வழக்கறிஞர் அலிம் அல் புகாரி கடுமையான விமர்சனம்
