spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்டைர்லைட் ஆலை நாட்டின் சொத்தா? உச்சநீதிமன்றத்தில் விசாரணை

ஸ்டைர்லைட் ஆலை நாட்டின் சொத்தா? உச்சநீதிமன்றத்தில் விசாரணை

-

- Advertisement -

sterlite

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறி வேதாந்த நிறுவனம் தாக்கல் செய்திருந்த இடையிட்டு முடிவை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

we-r-hiring

supreme

தமிழக அரசு தனது கருத்து மே மாதம் நான்காம் தேதி நடத்தவிருக்கும் அடுத்த கட்ட விசாரணையில் தெரிவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. . இதன்படி வேதாந்த நிறுவனம் தாக்கல் செய்திருக்கும் கூடுதல் பிரமான பத்திரத்தில், ’’ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தபோது நேரிடையாக 4000 பேருக்கும் மறைமுகமாக 20 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது . ஆலை சார்ந்த துணை தொழில் நிறுவனங்களில் 2 லட்சம் பேர் பயனடைந்து வந்தார்கள். இந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு விட்டதால் தாமிரத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்த இந்தியா இப்போது இறக்குமதி செய்யும் நாடாக மாறிவிட்டது.

ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் சொத்து. நாட்டின் நன்மைக்காக ஸ்டெர்லைட் ஆலையை பயன்படுத்த வேண்டும். நிபுணர் குழுவில் கண்காணிப்பின் கீழ் ஆலையை இயக்க அனுமதிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்த வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

MUST READ