Homeசெய்திகள்தமிழ்நாடு'ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் பின்னணி'- விரிவான தகவல்!

‘ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் பின்னணி’- விரிவான தகவல்!

-

 

'ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் பின்னணி'- விரிவான தகவல்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த வழக்கின் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்!

ஆவடியில் காதல் தகராறில் காவலர் தூக்கிட்டு தற்கொலை!

கடந்த பிப்ரவரி 15- ஆம் தேதி மேற்கு டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள அவென்டா என்ற நிறுவனத்தில் டெல்லி காவல்துறையினரும், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து ஆய்வு செய்த போது, 50 கிலோ அளவில் மெத்தாபெட்டமைன் போதைப்பொருளின் மூலப்பொருளான சூடோபெட்ரின் என்ற பொருள் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 2,000 கோடி ஆகும்.

இதன் தொடர்ச்சியாக அன்றைய தினமே சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரஹ்மான், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கடத்தல் சம்பவத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளரும், தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது.

பிப்ரவரி 21- ஆம் தேதி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்களான சலீம், மைதீன் ஆகியோர் தலைமறைவாகிவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிப்ரவரி 24- ஆம் தேதி சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்மன் ஒட்டிச் சென்றனர்.

அதில், பிப்ரவரி 26- ஆம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 25- ஆம் தேதி ஜாபர் சாதிக்கை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து தி.மு.க. பொதுச்செயலாளர் உத்தரவிட்டிருந்தார்.

ஆவடி அருகே ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

பிப்ரவரி 26- ஆம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஆஜராகவில்லை. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 28- ஆம் தேதி மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்று சுமார் 2 மணி நேரம் சோதனை செய்து பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து அவரது வீட்டிற்கு சீல் வைத்து சென்றனர்.

இதையடுத்து, ஜாபர் சாதிக் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க மார்ச் 01- ஆம் தேதி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மார்ச் 02- ஆம் தேதி அதிக பணப்பரிமாற்றம் நடந்த ஜாபர் சாதிக்கின் 8 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

MUST READ