Homeசெய்திகள்தமிழ்நாடுஜன.26- ஆம் தேதி கிராமச் சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஜன.26- ஆம் தேதி கிராமச் சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு!

-

 

தலைமை செயலகம்

வரும் ஜனவரி 26- ஆம் தேதி குடியரசுத் தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராமச் சபைக் கூட்டங்களை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

காரில் ராமர் கோவில் வடிவில் ஸ்டிக்கர் ஒட்டி கும்பாபிஷேக அழைப்பிதழ்!

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜனவரி 26- ஆம் தேதி குடியரசுத் தினத்தை முன்னிட்டு, அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் கிராமச் சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். கிராமச் சபைக் கூட்டங்கள், மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக் கூடாது. கிராமச் சபைக் கூட்ட நிகழ்வுகளை ‘நம்ம கிராமச் சபை’ செயலியில் கூட்டங்களில் பங்கேற்கும் அதிகாரிகள் உள்ளீடு செய்ய வேண்டும்.

கிராமச் சபைக் கூட்டத்துக்கான செலவுத் தொகை ரூபாய் 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை அதிகாரிகள், பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்.” இவ்வாறு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் – பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா ஆறுதல்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிராமச் சபைக் கூட்டங்களில் பங்கேற்று வந்த நிலையில், வரும் குடியரசுத் தினத்தன்று நடைபெற உள்ள கூட்டங்களில் பங்கேற்பார் என்றும், எந்த மாவட்டத்தில் பங்கேற்பார் என்ற தகவலும் விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ