spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு28 பேருக்கு வேலை- என்.எல்.சி. நிறுவனம் விளக்கம்!

28 பேருக்கு வேலை- என்.எல்.சி. நிறுவனம் விளக்கம்!

-

- Advertisement -

 

NLC

we-r-hiring

உண்மை நிலையை அறியாமல் என்.எல்.சி.யில் வட மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டதாக தவறான செய்திப் பரப்பப்படுவதாக என்.எல்.சி. நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கருணாநிதி நினைவுத் தினம்- அமைதி பேரணி தொடங்கியது!

என்.எல்.சி. நிறுவனத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்களில் 28 பேருக்கு 1992- ஆம் ஆண்டு முதல் 2012- ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் முறைகேடாக வேலை வழங்கப்பட்டுள்ளதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக என்.எல்.சி. நிர்வாகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஈபிஎஸ்-ஐ வீழ்த்தாமல் ஓயமாட்டேன்; எதைக்கண்டும் பயமில்லை- டிடிவி தினகரன்

அந்த 28 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள என்.எல்.சி. சுரங்கங்கள் மற்றும் அனல்மின் திட்டங்களுக்காக நிலம் வழங்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு வேலை வழங்கப்பட்டதாக அந்நிறுவனம் தெளிவுப்படுத்தியுள்ளது. என்.எல்.சி. நிறுவனம் தேசிய அளவிலான நிறுவனம் என்பதை கருத்தில் கொள்ளாமலும், உண்மை நிலையைத் தவறாகக் கருதி தொடர்பில்லாத நபர்களுக்கு நிலம் வழங்கியவர்களின் பிரிவின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கியதாக தவறான செய்திப் பரப்பியதாகவும் தெரிவித்துள்ளது.

MUST READ