Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழ் சமூகத்திற்கு உயிராக இருந்தவர் கருணாநிதி"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“தமிழ் சமூகத்திற்கு உயிராக இருந்தவர் கருணாநிதி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

 

"தமிழ் சமூகத்திற்கு உயிராக இருந்தவர் கருணாநிதி"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: TN Govt

இன்று (ஜூன் 02) காலை 10.00 மணிக்கு சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி முன்னிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

மேகதாது விவகாரம்- நம் உரிமையை ஸ்டாலின் விட்டுகொடுத்துவிட்டார்: ஆர்.பி. உதயகுமார்

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ் சமுதாயத்திற்கு உயிராக இருந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி என்றால் அது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான். திராவிட மாடல் அரசின் புகழை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் காணிக்கையாக்குகிறேன். கருணாநிதி வகுத்த வழியில் தான் தமிழகத்தில் அனைத்து துறைகளும் இயங்குகின்றன.

50 ஆண்டு காலத்தில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் கருணாநிதி. மக்கள் மனங்களில் இன்றும் ஆட்சி செய்கிறார் கருணாநிதி. ஜப்பான், சிங்கப்பூரில் மேற்கொண்ட பயணத்தில் ஏராளமான முதலீடுகளை ஈர்த்துள்ளேன். இந்தியாவில் தொழில் தொடங்கினால், தமிழகத்தில்தான் முதலீடு செய்வோம் என்று நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. கடந்த 1997- ஆம் ஆண்டு டைடல் பூங்காவை ஏற்படுத்தி புரட்சியை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

உலக தரத்தில் சென்னையில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். கலைஞர் கன்வென்ஷன் சென்டர் என்ற பெயரில் உலக தரத்தில் சென்னையில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். இந்த அரங்கம் 25 ஏக்கர் பரப்பளவில் 5,000 பேர் அமரும் வகையில் அரங்கம் அமைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

கரூரில் 8-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

இந்த நிகழ்ச்சியில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மருத்துவர் இரா.செல்வராஜ் இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ