Homeசெய்திகள்தமிழ்நாடுகாமராஜர் பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

காமராஜர் பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

-

 

காமராஜர் பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
Photo: TN Govt

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான இன்று (ஜூலை 15) தமிழக அரசு கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை நங்கநல்லூரில் உள்ள நேரு அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (ஜூலை 15) காலை 08.00 மணிக்கு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

பிரான்ஸ் அதிபருக்கும், அவர் மனைவிக்கும் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் அகராதி புத்தகங்களை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையையும் வழங்கினார். அதேபோல், முதலமைச்சருக்கு பரிசளித்த 7,740 புத்தகங்களை அரசு நூலகங்களுக்கு வழங்கினார்.

லியோ ஷூட்டிங்கிற்கு ஃபுல் ஸ்டாப்….. லோகேஷ் கனகராஜின் ஸ்வீட் ட்வீட்!

கல்வி வளர்ச்சி நாள் விழாவில், அமைச்சர்கள் பொன்முடி, அன்பரசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ