Homeசெய்திகள்தமிழ்நாடுகீழடியில் பண்டைய கால விளையாட்டுகள் குறித்த அனிமேஷன்

கீழடியில் பண்டைய கால விளையாட்டுகள் குறித்த அனிமேஷன்

-

கீழடியில் பண்டைய கால விளையாட்டுகள் குறித்த அனிமேஷன்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் பண்டைய கால விளையாட்டு குறித்த அனிமேஷனை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பு

கீழடி அகழாய்வு அருங்காட்சியகத்தில், அகரம், கொந்தகை, மணலூர் மற்றும் கீழடி உள்ளிட்ட இடங்களில் ஆட்டகாய்கள், வட்டசில்லுகள், சிறுவர்கள் விளையாடும் பொம்மை, விரல் இஞ்ச் பானை, மாடு, காளை பொம்மைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தை காணவரும் மாணவ, மாணவிகள், மெகா சைஸ் இணையதள ஸ்கீரினில் விளையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிற்பங்கள் முன் நின்று செல்பி எடுத்து மகிழும் மாணவ, மாணவிகள்

அருங்காட்சியகத்தில் உள்ள சிற்பங்களின் அருகில் நின்று மாணவ, மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இதுவரை எந்த அருங்காட்சியகங்களிலும் இதுபோன்ற விளையாட்டுகள் இல்லாததால் மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர்.

MUST READ