spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"கோடநாடு வழக்கு- ஆகஸ்ட் 1-ல் போராட்டம்"- ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு!

“கோடநாடு வழக்கு- ஆகஸ்ட் 1-ல் போராட்டம்”- ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு!

-

- Advertisement -

 

"கோடநாடு வழக்கு- ஆகஸ்ட் 1-ல் போராட்டம்"- ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு!
Video Crop Image

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோர் கூட்டாக இன்று (ஜூலை 11) காலை 09.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

we-r-hiring

சண்டைப் பயிற்சியாளரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் கைது!

அப்போது பேசிய வைத்திலிங்கம், “கோடநாடு கொலை, கொள்ளை நிகழ்ந்து ஆறு ஆண்டுகள் கடந்தும் விசாரணை கிடப்பில் உள்ளது. கோடநாடு வழக்கில் விரைந்து விசாரணை நடத்திக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆட்சிக்கு வந்த 90 நாட்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும், மாநில அளவில், வரும் ஆகஸ்ட் 01- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்டு அண்ணாமலை கடிதம்!

அதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “கோடநாடு வழக்கில் விரிவான விசாரணை நடத்தினால் தான் குற்றவாளிகள் யார் என்பது தெரிய வரும். பா.ஜ.க. கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு வரவில்லை” என்றார்.

MUST READ