spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகோவையில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!

கோவையில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!

-

- Advertisement -

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவையில் அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

we-r-hiring

அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கோவை நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, கழக வெற்றி வேட்பாளர் திரு. சிங்கை.G. ராமச்சந்திரன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். இதில் பேசிய அவர் பல்வேறு சாலை திட்டங்கள், குடிநீர் வசதிக்கான திட்டங்களை இத்தொகுதிக்கு நிறைவேற்றிய அரசு @AIADMKOfficial அரசு! தேர்தல் ஜுரத்தால் திரு. ஸ்டாலின் அவர்கள் ஏதேதோ புலம்பிக்கொண்டு இருக்கிறார்.

அரசியல் ஆதாயத்திற்காக நாகரிகம் இல்லாமல் பேசுகிறார் திரு.@mkstalin அவர்கள். ஒரு முதலமைச்சர் பேசுகின்ற பேச்சா இது? வெள்ளைக்கொடி ஏந்திய 23ஆம் புலிகேசி போல “வெள்ளைக்குடை ஏந்திய பொம்மை வேந்தர்” திரு. ஸ்டாலின் அவர்கள். 656 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் பெற்றுவிட்டு, உத்தமர் போல நடிக்கிறார் திரு. ஸ்டாலின் அவர்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் மயங்கி விழுந்திருப்பார்!

 

MUST READ