கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமனுக்கு வரும் செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற என்.சி.சி முகாமில் 12 வயது சிறுமிக்கு, என்.சி.சி பயற்றுநரும், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமன் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலிசார் தனியார் பள்ளி முதல்வர், தாளாளர் உள்ளிட்ட 7 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த நா.த.க முன்னாள் நிர்வாகி சிவராமன் கோவையில் வைத்து தனிப்படை போலிசார் கைது செய்தனர்.
போலிசாரின் விசாரணையில் சிவராமன், என்.சி.சி. போலி பயிற்சியாளர் என்பதும், அப்பள்ளியில் அனுமதியின்றி என்சிசி முகாம் நடைபெற்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து, சிவராமனை போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவருக்கு செப்டம்பர் 2ஆம் தேதி வரைகாவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொ டர்ந்து சிவராமனை போலீசார் சிறையில் அடைத்தனர்.