Homeசெய்திகள்தமிழ்நாடு'குத்தம்பாக்கம் பேருந்து நிலையக் கட்டுமான பணிகள் மும்முரம்'- விரிவான தகவல்!

‘குத்தம்பாக்கம் பேருந்து நிலையக் கட்டுமான பணிகள் மும்முரம்’- விரிவான தகவல்!

-

- Advertisement -

 

'குத்தம்பாக்கம் பேருந்து நிலையக் கட்டுமான பணிகள் மும்முரம்'- விரிவான தகவல்!

கிளாம்பாக்கத்தைத் தொடர்ந்து பூவிருந்தவல்லியை அடுத்த குத்தம்பாக்கத்தில் இந்தாண்டு இறுதிக்குள் புதிய பேருந்து நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குத்தம்பாக்கம் எங்குள்ளது? அங்கு பேருந்து நிலையம் வருவதால் என்ன பயன்? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

அசோக் செல்வன், சாந்தனு கூட்டணியின் ‘ப்ளூ ஸ்டார்’….. ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை அருகே உள்ள குத்தம்பாக்கம் கிராமத்தில் புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. நிறைவடையும் தருவாயில் உள்ள அந்த கட்டுமானப் பணிகள் குறித்து பேசிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு, விரைவில் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்றார்.

திருமழிசை, குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு, கடந்த 2019- ஆம் ஆண்டு அறிவித்தது. மேற்கு மாவட்டங்கள், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. மாநில வீட்டு வசதி வாரியத்தின் திருமழிசை துணை நகர திட்டத்தில் இருந்து 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டது.

இரண்டு மகள்களுடன் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த பிரபல ஹாலிவுட் நடிகர்!

இந்த நிலத்தில் 336 கோடி ரூபாயில் ஐந்து லட்சம் சதுர அடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள், கடந்த 2021- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினர். குத்தம்பாக்கம் நிலையத்தில் புறநகர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மாநகர பேருந்துகள் என ஒரே நேரத்தில் 130 பேருந்துகளை நிறுத்தும் வசதி உள்ளது.

பேருந்து நிலையத்தின் கீழ் தளத்தில் 1,680 இருசக்கர வாகனங்கள், 235 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதியும் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணியர் பயன்படுத்தும் வகையில் நான்கு லிப்டுகள், நகரும்படிக்கட்டுகள் ஆகியவையும் அமைக்கப்படவுள்ளன.

வைஃபை அனைத்து வசதிகளுடன் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பெங்களூரு செல்லும் ஐ.டி. ஊழியர்களுக்கு இந்த பேருந்து நிலையம் பேருதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ