spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

-

- Advertisement -

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டில் தி.மலை, திருச்சி, பெரம்பலூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, காஞ்சி, செங்கல்பட்டு, சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் எனவும் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தஞ்சை, அரியலூா், பெரம்பலூா், கடலூா், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஆகிய 12 மாவட்டங்களில் தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்மேலும், மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் இன்றும், நாளையும் மழை பெய்யக்கூடும் என்றும் சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடியில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது . முத்தம்பட்டி, காட்டுகருவேப்பிலைப் பட்டி, சிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடைகாலங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல்! பொது மக்கள் அச்சம்…

MUST READ