Homeசெய்திகள்தமிழ்நாடுபொதுத் தேர்வில் தவறியோர் மனம் தளர்ந்து விடாதீர்கள் - இராமதாஸ் அறிவுரை

பொதுத் தேர்வில் தவறியோர் மனம் தளர்ந்து விடாதீர்கள் – இராமதாஸ் அறிவுரை

-

- Advertisement -

12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் வென்ற மாணவச் செல்வங்களுக்கு பாராட்டுகள் என்றும் பொதுத் தேர்வில் தவறியோர் மனம் தளர்ந்து விடாதீர்கள் என்றும் பா.ம.க. நிறுவனர், தலைவர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளாா்.பொதுத் தேர்வில் தவறியோர் மனம் தளர்ந்து விடாதீர்கள் - இராமதாஸ் அறிவுரை

மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்தின் படியான 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதிய 7 லட்சத்து 92,494 மாணவர்களில் 95.03% மாணவச் செல்வங்கள் வெற்றி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும். வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் தோல்வியடைந்தவர்களுக்கு நான் சொல்ல விரும்பும் அறிவுரை மனம் தளர்ந்து விடாதீர்கள் என்பது தான். அடுத்த மாதம் நடைபெறவுள்ள துணைத் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்று உயர் கல்வியை தொடர வேண்டும் என்று உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளாா்.

மே 10-ம் தேதி வரை விமான நிலையங்கள் தற்காலிகமாக முடக்கம்…

MUST READ