Homeசெய்திகள்தமிழ்நாடு"பஞ்சாபில் சிக்கி தவித்த மாணவர்கள்… தமிழ்நாடு அரசு உதவியால் தாயகம் திரும்பினர்"

“பஞ்சாபில் சிக்கி தவித்த மாணவர்கள்… தமிழ்நாடு அரசு உதவியால் தாயகம் திரும்பினர்”

-

- Advertisement -

“போர் சூழலால் நாங்கள் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தோம் தமிழ்நாடு அரசு அதிகாரிகளை பார்த்தவுடன் தான் எங்களுக்கு மன அழுத்தம் குறைந்தது. “எங்களை நன்றாக கவனித்து உணவு கொடுத்து சென்னை திரும்ப உதவிய அரசுக்கு எங்களுடைய நன்றிகள் என மாணவர்கள் பேட்டி அளித்துள்ளனர்.

"பஞ்சாபில் சிக்கி தவித்த மாணவர்கள்… தமிழ்நாடு அரசு உதவியால் தாயகம் திரும்பினர்"

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சிக்கி இருந்த 12 மாணவர்கள் தமிழ்நாடு அரசு உதவியுடன் நேற்று டெல்லி அழைத்துவரப்பட்டனர். இந்த நிலையில் டெல்லியில் இருந்து 5 மாணவர்கள் விமான மூலம் சென்னை திரும்பினர். அவர்களை அயலகத் தமிழர் நலத்துறை துணை இயக்குனர் பொறுப்பு புகழேந்தி தலைமையில் அதிகாரிகள் வரவேற்றனர்.

மேலும் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர் செல்ல அரசு சார்பில் சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன் மூலம் மாணவர்களின் சொந்த ஊர்களான நாமக்கல் ,கோவை உள்ளிட்ட சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் இன்று மதியம் 1 மணிக்கு 7 மாணவர்கள் வருகை தர உள்ளனர் அவர்களை அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு நாசர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் வரவேற்க உள்ளனர்.

இவர்கள் கோவை, நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அவரது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும் தமிழ்நாடு அரசு சார்பில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள். பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் நாட்டின் தாக்குதல் அதிகமாக இருக்கிறது, தமிழ்நாடு அரசு எங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளது, எங்களுக்கும் எல்லைக்கும் 60 கிலோமீட்டர் தொலைவு இருந்தது, நாங்கள் மிகவும் மன அழுத்தத்துடன் இருந்தோம்.  ஆனால்,  தமிழக அரசு அதிகாரிகளை பார்த்தவுடன் எங்களுடைய அழுத்தம் குறைந்தது தமிழ்நாடு அரசு அதிகாரிகள் எங்களை நன்றாக பார்த்து தற்பொழுது சொந்த ஊர் அனுப்பி வைத்துள்ளனர்.  என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் இருந்தோம், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் எங்களை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டனர், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் எங்களுக்காக பார்த்து பார்த்து அனைத்தையும் செய்தனர் என்று பேசியுள்ளனர்.

சென்னை விமானநிலையத்தில் கோவையை சேர்ந்த ரெமி செய்தியாளரிடம் பேசியதாவது, ”பஞ்சாப்பிலிருந்து டெல்லி வரை நாங்கள் பேருந்தில் வந்தோம் எங்கு தங்குவது என்று தெரியாமல் இருந்த பொழுது தமிழ்நாடு அரசின் உதவி எண்ணுக்கு அழைத்தோம் உடனடியாக அதிகாரிகள் எங்களை தொடர்பு கொண்டு பேசினார்கள் பிறகு நாங்கள் அரசு அதிகாரிகளை சந்தித்தோம்  எங்களை நன்றாக கவனித்து தற்பொழுது தாயகம் திரும்ப உதவினார்கள் என்று கூறியுள்ளாா்.

2026 தேர்தலில் அதிமுக கட்சி அழிந்துவிடும் என அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி!

MUST READ