spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசிறுத்தை அச்சம்- அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!

சிறுத்தை அச்சம்- அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!

-

- Advertisement -

 

சிறுத்தை அச்சம்- அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!

we-r-hiring

சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!

மயிலாடுதுறை மாவட்டத்தை அச்சுறுத்தி வந்த சிறுத்தை அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதிக்குள் நுழைந்தது. இதனை வனத்துறையினர் உறுதிப்படுத்தினர். அத்துடன், செந்துறை, பொன்பரப்பி, சிதளவாடி, உஞ்சினி ஆகிய கிராமங்களில் உள்ள முந்திரி காடுகளில் வனத்துறையினர் கேமராக்களைப் பொருத்தியுள்ளனர்.

சிறுத்தையைப் பிடிப்பதற்காக மயிலாடுதுறையில் இருந்து கூண்டுகளும் வரவழைக்கப்பட்டுள்ளது. சிறுத்தை நடமாட்டத்தால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஏப்ரல் 12) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பள்ளிக்கு சென்ற மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“பா.ஜ.க. ஆட்சி படுத்தோல்வி அடைந்துவிட்டது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக 63852- 85485 என்ற வாட்ஸ் அப் எண்ணில் மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

MUST READ