
பனகல் அரசரின் பிறந்தநாளையொட்டி, தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “திராவிட அரசுகளின் ஆதிவிதையாக விளங்கும் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று!

“முதலமைச்சரும், மு.க.அழகிரியும் சந்தித்துப் பேசினர்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
அதிகாரத்தை நாம் அடைவதன் மூலம் நமது மக்களுக்கு நம்மால் எத்தகைய நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கான அரசாணை, மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையில்லை, பெண்களுக்கு வாக்குரிமை, அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் போன்ற எண்ணற்ற புரட்சிகரத் திட்டங்களால் காட்டியவர் அவர்! பனகல் அரசர் பற்றிய துணைப்பாடக் கட்டுரைதான் பள்ளி மாணவராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞருக்கு அரசியல் அரிச்சுவடியாக விளங்கியது.
“ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்” எனத் தந்தை பெரியார் போற்றிய பனகல் அரசர் வழிநடப்போம்! தமிழ்நாட்டை முன்னேற்றுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.


