spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் வீடியோ பதிவு!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் வீடியோ பதிவு!

-

- Advertisement -

 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் வீடியோ பதிவு!

we-r-hiring

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி அரசியல் கட்சிகள் அரசியல் செய்து வருவதாக விருதுநகர் பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது வழக்கு!

அந்த வீடியோவில் பதிவில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதற்கட்ட பணிகளை எல் அண்ட் டி நிறுவனம் தொடங்கியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை 33 மாதங்களுக்குள் கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என பிரதமர் தன்னிடம் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர். திருமங்கலம் ரயில்வே மேம்பாலம் கூடிய விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.

கள்ளக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் வருவதற்கு முயற்சி எடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை – ஒரு சவரன் ரூ.53.000-த்தை நெருங்கியது!

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் நடிகை ராதிகா சரத்குமார், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க.வின் விஜயபிரபாகரன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

MUST READ