- Advertisement -
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 6- ம் சுற்று முடிவில் தலா 11 காளைகளை அடக்கி அபிசித்தர், திவாகர் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
11 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்துள்ள அபிசித்தர், கடந்த ஆண்டு முதல் பரிசுப் பெற்றவர் ஆவார். தலா 7 காளைகளை அடக்கி பாலமுருகன், தமிழரசன் ஆகியோர் 2- ம் இடம் பிடித்துள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் தற்போது வரை 430 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. அவிழ்த்துவிடப்பட்ட 430 காளைகளில் 143 காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிப்பட்டது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் 8 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 245 காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் 8 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 38 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 38 பேரில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 594 மாடுபிடி வீரர்களுக்கு நடத்தப்பட்ட உடல் தகுதி பரிசோதனையில் 45 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.