
மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆணையராக தினேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் கால் பதிக்கும் அமுல் நிறுவனம்!
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மதுரை மாநகராட்சியின் ஆணையாளராக நியமிக்கப்பட்ட நான்கு மாதத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மதுபாலன் தூத்துக்குடிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021- ஆம் ஆண்டு ஜூன் மாதம் மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்ட கார்த்திகேயன், 2022- ஆம் ஆண்டு மே மாதம் ஓராண்டு நிறைவடையும் முன்பாக நெல்லை மாவட்ட ஆட்சியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக சிம்ரன்ஜித் சிங் நியமிக்கப்பட்டார். இவரும் 2022- ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஓராண்டு முடிவடைந்ததைத் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மீண்டும் மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக பிரவீன் குமார் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25% ஆக உயர்வு!
தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர்கள் ஓராண்டிற்குள் மாற்றப்பட்டு வரும் நிலையில், மக்களவைத் தேர்தலையொட்டி, மதுரை மாநகராட்சி ஆணையாளராக இருந்த மதுபாலன், நான்கு மாதத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.