
நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மன்சூர் பேசியது தப்புன்னா… அந்த நடிகையை பற்றி ரஜினி பேசியதும் தப்புதான்…. பாத்திமா பாபு!
நடிகை திரிஷா குறித்து ஆபாசமாகப் பேசியதாக, நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல்துறையினர், இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, காவல்துறையினரின் விசாரணைக்கு நடிகர் மன்சூர் அலிகான் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு; அடக்க நினைத்தால் அடங்கமறு; இப்போது செல்கிறேன், என்னை மன்னித்துவிடு என்று குறிப்பிட்டு நடிகர் மன்சூர் அலிகான் இன்று (நவ.24) அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று (நவ.24) காலை 11.00 மணிக்கு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகர் மன்சூர் அலிகான் பேச்சு குறித்து வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடப்பதாகத் தெரிவித்தார்.
சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு….. அறிக்கை வெளியிட்ட மன்சூர் அலிகான்!
இதையடுத்து, நடிகர் மன்சூர் அலிகானின் முன் ஜாமீன் கோரிய மனுவை நீதிபதி அல்லி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.