தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர் பாண்டியன் டெல்லியில் பேட்டி அளித்துள்ளார்.
குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் கொண்டு வர வேண்டும், விவசாயிகள் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2020ம் ஆண்டு முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
விவசாய சங்க சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் , முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது புள்ளி விவரங்களுடன் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அதில் , குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி மற்றும் உரிய சந்தை வசதிகளை ஏற்படுத்த குழு பரிந்துரைத்ததோடு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.
எனவே மத்திய அரசை வலியுறுத்தும் விதம் விவசாய சங்க தலைவர் டல்லேவால் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளார். எனவே விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதித்துள்ளனர். ஆறுகள் தூர்வாரப்படாமல் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வெள்ள நிவாரண பணிகளுக்கான நிதியை தடையின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கொள்கிறோம்.
கடலூர் புதிய துறைமுகத்திற்கு அஞ்சலையம்மாள் பெயர் சூட்ட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்