Homeசெய்திகள்தமிழ்நாடுஅமர்நாத்தில் சிக்கியுள்ள பக்தர்களை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை: செஞ்சி மஸ்தான்

அமர்நாத்தில் சிக்கியுள்ள பக்தர்களை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை: செஞ்சி மஸ்தான்

-

அமர்நாத்தில் சிக்கியுள்ள பக்தர்களை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை: செஞ்சி மஸ்தான்

வடமாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் யாத்திரை சென்று சிக்கிய 25 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

யாருக்கு சார் இந்த மனசு வரும்! சொத்தை அரசுக்கு எழுதிக்கொடுத்த அமைச்சர்  மஸ்தான்! மதிப்பு எவ்வளவு? | Minister Gingee Masthan who gave the property  to the Tamilnadu ...

சென்னை தாம்பரத்தை சேர்ந்த சங்கர் தலைமையில் தமிழகத்திலிருந்து 21 பேர் கடந்த 4 ஆம் தேதி, அமர்நாத் புனித யாத்திரைக்கு புறப்பட்டனர். காஷ்மீரில் உள்ள பால்டால் பகுதிக்கு சென்றடைந்த யாத்திரை குழுவினர், பின்னர் அங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரம் உள்ள அமர்நாத் கோயிலுக்கு மலைச்சாலையில் நடந்து சென்று பனிலிங்கத்தை தரிசித்தனர். மறுநாள் மீண்டும் பால்டால் பகுதிக்கு வந்தடைந்தனர். அப்போது ஸ்ரீநகருக்கும், காஷ்மீருக்கும் இடையே நிலச்சரிவு ஏற்பட்டு பாதை முடிவிட்டது. இதனால் சி.ஆர்.பி.எப் வீரர்கள், மணி காம்ப் என்ற இடத்தில் உள்ள முகாமில் நான்கு நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் சிக்கி தவிக்கின்றனர்.

அமர்நாத்

அவர்கள் தங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், “வடமாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் யாத்திரை சென்று சிக்கிய 25 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர், மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் 96000 23654 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அமர்நாத்தில் சிக்கியுள்ள பக்தர்களை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. துறை சார்பாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றோம். விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள்” என்றார்.

MUST READ