Homeசெய்திகள்தமிழ்நாடு'தனியார் நெய்யை விட ஆவின் நெய் விலைக்குறைவு' - அமைச்சர் மனோ தங்கராஜ்

‘தனியார் நெய்யை விட ஆவின் நெய் விலைக்குறைவு’ – அமைச்சர் மனோ தங்கராஜ்

-

‘தனியார் நெய்யை விட ஆவின் நெய் விலைக்குறைவு’ – அமைச்சர் மனோ தங்கராஜ்

தனியார் நெய் விலையை விட ஆவின் நெய் விலைக்குறைவாக விற்கப்படுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Image

ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூபாய் 70 முதல் ரூபாய் 100 வரை அதிகமாகவும், வெண்ணெய் விலை கிலோவுக்கு ரூபாய் 30 முதல் ரூபாய் 50 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆவின் நிறுவன பால் பொருள்கள் விற்பனை விலையை மட்டும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியிருப்பது, தனியார் பால் நிறுவனங்களை வளர்க்க, ஆவின் நிறுவனத்தையே அழித்து விட வேண்டும் என்று தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத்தான் தெரிகிறது. ஆவின் பால் பொருள்கள் விலையை உயர்த்தியிருப்பது, தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகத்தான் அமையும் எனக் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “தனியார் நெய் விலையை விட ஆவின் நெய் விலைக்குறைவாக விற்கப்படுகிறது. வெளிச்சந்தைகளில் தனியார் நெய் லிட்டருக்கு ரூ.960 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் நெய் விலை உயர்வு குறித்து அண்ணாமலை பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது” என்றார்.

MUST READ