
செம்மண் குவாரிகளுக்கு சட்ட விரோதமாக அனுமதி அளித்து 28 கோடி ரூபாய் வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் அந்த பணத்தில் சொத்துக்கள் வாங்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த படத்திற்கு தயாராகும் லோகேஷ் கனகராஜ் அண்ட் டீம்……லேட்டஸ்ட் அப்டேட்!
கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, விழுப்புரம் மாவட்டத்தில் தனது உறவினர்களுக்கு முறைகேடாக பல்வேறு குவாரிகளுக்கு அனுமதி அளித்ததாகவும், அதன் மூலம் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அந்த ஐந்து ஆண்டுகளில் அரசுக்கு ரூபாய் 28 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்தனர். இந்த வழக்கில், கடந்த 2012- ஆம் ஆண்டு பொன்முடி மற்றும் அவரது மகனும், கள்ளக்குறிச்சியின் மக்களவை உறுப்பினருமான கௌதம சிகாமணி, தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி, ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் 28 கோடி ரூபாய் மூலம் என்னென்ன சொத்துக்கள் வாங்கப்பட்டன? எங்கெல்லாம் முதலீடுகள் செய்யப்பட்டன? என்பது குறித்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூர்யாவின் நடிப்பில் உருவாகும் கங்குவா….. ரசிகர்களுக்காக காத்திருக்கும் செம ட்ரீட்!
மேலும், அந்த தொகையை கௌதம் சிகாமணி, வெளிநாடுகளில் முதலீடுகளை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


