spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு- விசாரணையை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு- விசாரணையை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

-

- Advertisement -

senthil balajiஅமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை நாளை (ஜூலை 07) ஒத்திவைப்பதாக மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை ஓட ஓட வெட்டிய கும்பல்

we-r-hiring

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி மேகலா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் மாறுபட்டத் தீர்ப்பளித்தனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில், இந்த வழக்கு இன்று (ஜூலை 06) விசாரணைக்கு வந்தது.

வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபல் வாதாட உள்ளதால், வழக்கை அடுத்தவாரம் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டுமென மேகலா தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரிக்க வேண்டுமென அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

மது போதையில் ஏஎஸ்பி வாகனத்தை வழி மறைத்து லிப்ட் கேட்ட 2 வாலிபர்கள் கைது

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை எப்போது விசாரிக்கலாம் என்பது குறித்து நாளை (ஜூலை 07) முடிவு எடுக்கப்படும் என அறிவித்தார்.

MUST READ