spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்...

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் இரங்கல்!

-

- Advertisement -

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் நடந்த ஆன்மிகக் கூட்டத்தில் சிக்கி 122 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

we-r-hiring

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். இந்த கடினமான சூழலில் பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடைபெற்ற ஆன்மீக சத்சங்க நிகழ்வின் போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலம் பெற எனது பிரார்த்தனைகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ